முடிந்தது நேரம்.! இனி இதை செய்தால் 2 வருஷம் ஜெயில் உறுதி..!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப். 17) மலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை உள்ள தேர்தல் விதிமுறைகளை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

இந்த விதிமுறைகளின்படி, இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. ஊடகங்கள், முகநூல், வாட்ஸ் அப், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது.

இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிந்தவுடன் தொகுதி சாராத வெளியூர் நபர்கள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். விடுதிகள், வீடுகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்று நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில் வேட்பாளர் பங்கேற்கவோ கூடாது. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், இன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிட்டது.

இசை மற்றும் பொழுபோக்கு நிகழ்ச்சிகள், திரையரங்குகள் வாயிலாக பிரசாரம் செய்யக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

Kathir

Next Post

IPL 2024 | நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர் புதிய சாதனை.!

Wed Apr 17 , 2024
IPL 2024: உலக கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 31 போட்டிகள் முடிவடைந்துள்ளன. 10 அணிகள் மோதும் இந்த கிரிக்கெட் தொடரில் 6 வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. இவர்களைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]

You May Like