IPL 2024 | நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர் புதிய சாதனை.!

IPL 2024: உலக கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 31 போட்டிகள் முடிவடைந்துள்ளன. 10 அணிகள் மோதும் இந்த கிரிக்கெட் தொடரில் 6 வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது.

இவர்களைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்திலும் உள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் ஒரு வெற்றியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடைசி இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணி ஜெராக்ஸ் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது .

இந்நிலையில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே புதிய சாதனை படைத்திருக்கிறார். நடப்பு ஐபிஎல்(IPL 2024) தொடரில் அதிக டாட் பந்துகளை வீசி அவர் சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் வருட ஐபிஎல் தொடரில் 21 ஓவர்கள் பந்துவீசிய துஷார் துஷார் தேஷ்பாண்டே 60 டாட் பந்துகளை வீசி இருக்கிறார்.

இந்த வருட ஐபிஎல் தொடரில் இவர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More: முடிந்தது நேரம்.! இனி இதை செய்தால் 2 வருஷம் ஜெயில் உறுதி..!!

Next Post

உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு மத்திய அரசின் மகத்தான பாராட்டு!!

Wed Apr 17 , 2024
1991ல் பொருளாதாரம் தாராளமயமாக்கல் மற்றும் இந்திய பொருளாதாரத்தை திறந்துவிட நடவடிக்கை எடுத்த அப்போதைய பிரதமர் ஆக இருந்த நரசிம்மராவ் மற்றும் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் ஆகியோரை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பாராட்டி உள்ளது. 1952-ல் தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இச்சட்டம், பழமையானது மற்றும் ‛லைசென்ஸ் ராஜ்’ சகாப்த கொள்கைகளை குறிப்பதாக உள்ளது என நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்த […]

You May Like