Viral | நேரலையில் ஆபாசமாக திட்டிய நிருபர் .!! வைரலான வீடியோ.!! மன்னிப்பு கேட்ட செய்தி நிறுவனம்.!!

Viral: பத்திரிகைகளில் ரிப்போர்ட்டர் பணி என்பது கடினமான பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நேரலையில் செய்திகளை தெரிவிக்கும் போது அல்லது நேரலை விவாதங்களின் போது ஒருவர் தன்னிச்சையாக சிந்திக்கவும் எதிர்வினையாற்ற வேண்டியிருக்கிறது. நேரலையில் கேமராவின் முன் நடைபெறும் சில நிகழ்வுகள் ரிப்போர்ட்டர் பணிகளை மேலும் கடினமாக்குகிறது.

நேரலை நிகழ்வுகளில் பல நேரங்களில் நிருபர் ஒரு தவறை செய்கிறார். அது சிலருக்கு தர்ம சங்கடமாகவும் சிலருக்கு வேடிக்கையாகவும் அமைகிறது. இதேபோன்று சிஎன்பிசி-டிவி 18 செய்தி சேனலில் நிருபருக்கு தர்ம சங்கடமான நிகழ்வு நேற்று நடைபெற்றிருக்கிறது.

சிஎன்பிசி-டிவி 18 செய்தி சேனலின் நிருபர் அஸ்மித் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற பதஞ்சலி வழக்கு தொடர்பான விவரங்களை நேரலையில் ரிப்போர்ட் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் தனது வார்த்தைகளில் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து விரக்தியில் ஆபாசமான வார்த்தைகளை நேரலையில் பேசினார். இதன் பிறகு சுதாகரித்துக் கொண்டு அவர் தன் தவறை திருத்த முயற்சி செய்தார். ஆனால் தாமதமாகி அவர் பேசிய வார்த்தைகள் நேரலையாக ஒளிபரப்பாகி இருக்கிறது.’

தங்கள் ரிப்போர்ட்டர் தவறை உணர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் உடனடியாக செயல்பட்டு ரிப்போர்ட்டரை காப்பாற்றினார். லைவ் நிகழ்ச்சியை உடனடியாக துண்டித்த அவர் ரிப்போர்ட்டர் அஷ்மித் சொல்வது சரியாக கேட்கவில்லை. சிறிது நேரத்திற்கு பின் நேரலையை தொடரலாம் எனக் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிஎன்பிசி-டிவி தங்களது X வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள செய்தி நிறுவனம் ” எங்களது நிருபர் நேரலையில் இருக்கிறோம் என்பதை அறியாமல் கவனக்குறைவால் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். இந்த தவறுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். மேலும் உயர்ந்த தரத்தை நிலை நிறுத்துவதை உறுதி செய்ய இன்னும் கடினமாக உழைப்போம்” என குறிப்பிட்டுள்ளது.

இதற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன் ஒருவர் இதுபோன்ற மனித தவறுகள் எப்போதாவது நடக்கும். இதன் காரணமாக நிருபர் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கேமராவிற்கு முன் நேரலையில் இது போன்ற மனித தவறுகள் நடப்பது சகஜம் தான். இது ஒன்றும் புதிதாக நடந்த விஷயம் அல்ல. எனினும் வார்த்தைகளை கவனித்து நிதானமாக பேச வேண்டும் என்ற பாடம் இன்னும் உண்மையாகவே இருக்கிறது.

Read More: இந்த வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா..? 1ஆம் தேதி முதல் அதிரடி மாற்றம்..!!

Next Post

இன்று டெல்லி - குஜராத் அணிகள் மோதல்..!! புள்ளி பட்டியலில் எது டாப் தெரியுமா..?

Wed Apr 24 , 2024
ஐபிஎல் தொடரின் இன்றைய 40-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் இந்த இரு அணி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணி மோசமான தோல்வியை பதிவு செய்திருந்தது. அதற்கான பதிலடியை இன்று குஜராத் அணி டெல்லி அணிக்கு திரும்ப கொடுக்கும் என […]

You May Like