சென்னை அறிவாலயத்தில் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக பொறுப்பான துடிப்பான எதிர்க்கட்சியாக தனது கடமையை உறுதியாக செய்யும், இந்த ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டுக்காட்டுவோம்.. கேள்விகளை கேட்போம்.. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்..
தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின் வெட்டு, தொடர் குற்றங்கள் என நடக்கிறது.. இதனால் ஏன் தான் இந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.. தவெகவுக்கு வாக்களித்தவர்களும் வருத்தப்படுகின்றனர்.. வாக்களிக்காதவர்களும் வருத்தப்படுகின்றனர்.. இந்த ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டது..” என்று கூறினார்..
தீர்ந்து போன சக்தி என்று அதிமுகவை முதல்வர் விஜய் விமர்சித்தார்.. ஆனால் அதிமுகவில் இருந்து தான் எம்.எல்.ஏக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார்.. தீர்த்து போன சக்தியிடம் திருடும் முதல்வர் எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார்..?
மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாசிசமும், பாயாசமும் எல்.கேஜி. பிள்ளை மாதிரி சண்டை போட்டுக் கொள்வதாக முதல்வர் விஜய் நக்கல் நையாண்டி செய்தார்.. ஆனால் இப்போது விஜய் டெல்லி போய் என்ன செய்தார்..? நிபந்தனை இல்லாமல் நிதியை கொடுக்க வேண்டும் என்று தான் முதல்வர் விஜய் கேட்டிருக்கிறார்.. அப்படி தான் செய்ய முடியும்.. ஏனெனில் இது சினிமா இல்லை.. ஆட்சி நிர்வாகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
மாநில உரிமை சார்ந்த எதுவாக இருந்தாலும் திமுக அரசு போட்ட ப்ளூ பிரிண்ட் படி தான் யாராக இருந்தாலும் செயல்பட முடியும்.. இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் தமிழ்நாடு, பெண்கள் அதிகமாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு என திமுக அரசின் கொள்கை முடிவுகள் மாதிரி தான் முதல்வர் விஜய்யின் மொத்த பேச்சும் இருந்தது.. நம்மை நம்பி 1 கோடியே 55 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.. அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்..



