Flash : மொத்தமாக காலியாகும் அதிமுக கூடாரம்.. Ex. அமைச்சர்கள், எம்.பிக்கள் தவெகவில் இணைந்தனர்.. ஷாக்கில் இபிஎஸ்..!

admk member joins tvk

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன..


தேர்தலுக்கு பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்..

இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த விஜயதாரணி கடந்த 2024-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 2024-ல் பாஜகவில் இணைந்தார்.. 2024 மக்களவை தேர்தல் நேரத்தில் அவர் பாஜகவில் இணைந்ததால் அந்த தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் விஜயதாரணிக்கு பாஜக சீட் வழங்கவில்லை..

மேலும் பாஜகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படாததால் விஜயதாரணி அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.. மேலும் 2026 தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட விஜயதாரணி தோல்வி அடைந்தார்..

இந்த நிலையில் விஜயதாரணி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.. பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா தலைமையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.

அதிமுக முன்னாள் அமைச்ச்சர் பச்சமால், அதிமுகவின் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோரும் இன்று தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. தேனி பார்த்திபன், அரக்கோணம் ரவி, முன்னாள் எம்.பிக்கள் வனரோஜா, இளவரசன் உள்ளிட்டோரும் அதமுகவில் இருந்து விலகி, தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. அமமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சி நிர்வாகிகள் பலரும் இன்று தவெகவில் இணைந்தனர்..

Read More : இதை காரணம் காட்டி ஆவின் பச்சைப் பால் விற்பனையை நிறுத்துவீங்களா..? பொங்கிய அன்புமணி..!

RUPA

Next Post

"எப்போது தேர்தல் வந்தாலும் தவெக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள்.." மு.க. ஸ்டாலின் உறுதி..!

Sat Jun 13 , 2026
எப்போது தேர்தல் வந்தாலும் தவெக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. சென்னை அறிவாலயத்தில் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ பாஜகவின் ஜெராக்ஸ் போல் முதல்வர் விஜய் செயல்படுகிறார்.. நிதி ஆயோக் கூட்டத்தில் திமுகவின் சாதனைகள், கோரிக்கைகளையே கூறியுள்ளார் முதல்வர் விஜய்.. பாசிசம், பாயாசம் என நக்கல் செய்த முதல்வர் […]
mk stalin joseph vijay jpg 1 1

You May Like