TVK Vijay| “காங்கிரஸ் எப்பவும் தவெக பக்கம் தான்..! சங்கீதாவை வைத்து தேர்தல் நேரத்தில் அவதூறு!” – விஜய் பரபர பேச்சு

tvk vijay

தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் இன்று நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள கே டி சி நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்..


அப்போது பேசிய அவர் “ஜனநாயகனை முடக்கினால் நான் டிஸ்டர்ப் ஆவேன் என நினைத்தார்கள். அதற்கு யார் காரணம் என நம் அனைவருக்கும் தெரியும்.  தமிழ்நாடு காங்கிரஸை பல கோடிகள் கொடுத்து ஸ்டாலின் சார் கையில் போட்டுக் கொண்டார்.. உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் தான் உள்ளது.. சிறுபான்மை மக்களும் நம் பக்கம் தான் உள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய விஜய், தேர்தல் நேரத்தில் சுற்றி உள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள் என மனைவி சங்கீதாவை பற்றி சூசகமாக கூறினார். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கி சீர்குலைந்து கிடப்பதாக கூறிய விஜய், 2 வயது குழந்தையை திமுக நிர்வாகி கொலை செய்ததற்கு ஸ்டாலின் பதில் என்ன.? விளாத்திக்குளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரே அதற்கு என்ன சொல்ல போகிறார். 5 வருடமாக காவல்துறையை பொம்மை போல் வைத்திருக்கிறார்.

ஆட்சி சிறப்பாக இருந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இல்லாமல் இருக்கும். ஆட்சி சிறப்பாக இல்லை என்பதால் தான் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நான் போன பிறகு தான் கட்சி ஆரம்பித்தேன்.. காமராஜ் மாதிரி, அண்ணா மாதிரி, எம்,ஜி.ஆர் மாதிரி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும். ஒவ்வொரு வேட்பாளரையும் நானே பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளேன்.. தவெக வேட்பாளர்களும் விஜயும் வேறு வேறு இல்லை என்றார்.

Subscribe to my YouTube Channel

Read more: “திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து போய் உள்ளது.. அதான் நம் மீது காண்டு..” விஜய் பேச்சு..!

English Summary

TVK Vijay| Congress is always on the side of the government..! Sangeeta is being defamed during the election season! – Vijay

Next Post

“என்னை எதிர்ப்பவர்களால் இதை தைரியமா, கெத்தா சொல்ல முடியுமா..? திமுக, அதிமுகவுக்கு விஜய் சவால்..!

Wed Apr 8 , 2026
தவெக தலைவர் விஜய் இன்று நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமான தேர்தல் இல்லை.. இது ஒரு அதிசய தேர்தல்.. நம்ம தவெக ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நல்லா இருப்போம்.. விவசாயிகள், மீனவர்கள் நல்லா இருப்போம்.. அதனால் தான் பார்த்து பார்த்து வாக்குறுதிகளை அறிவித்து வருகிறோம்.. செய்ய முடியாததை சொல்ல மாட்டோம்.. செய்வதை மட்டுமே சொல்வோம், […]
TVK Vijay New Campaign

You May Like