TVK Vijay: தேர்தல் தேதி அறிவிப்பு…! தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு…!

தேர்தல் அறிவிப்புக் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 7 கட்டங்களாக தேர்தல் – ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் அறிவிப்புக் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட நிர்வாகிகளுடன் தினம் தோறும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக் காரணமாக, இன்று முதல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

Voter list: 18 வயது நிரம்பியவர்களா நீங்கள்? இன்றே கடைசிநாள்!... மிஸ் பண்ணிடாதீங்க!...

Sun Mar 17 , 2024
Voter list: 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றுடன்(மார்ச் 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் […]

You May Like