மீண்டும் மீண்டும்..! ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பானில் 6.6 என்று ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஷிகோகு தீவின் மேற்கு கடற்கரையில் புதன்கிழமை இரவு தாக்கியது. ஜப்பான் நேரப்படி இரவு 11:14 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை, கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன, சிறிய சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கமானது 39 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கி, அதன் மையம் புங்கோ கால்வாயில் இருந்தது, இது கியுஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பாதித்துள்ளது. இது குறித்தது தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி, செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், பல லேசான காயங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் அங்கங்கே தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளது, தெரு விளக்குகளும் சேதமடைந்துள்ளது, தேசிய சாலையில் நிலச்சரிவு உட்பட சில பகுதிகளில் சிறிய சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் முதலில் தெரிவித்த நிலையில், பின்னர் அந்த எண்ணிக்கையை 6.6 ஆக மாற்றியது.

Kathir

Next Post

இலவசம்!… இன்று உலக பாரம்பரிய தினம்!… இந்தியாவும் சில முக்கியமான இடங்களும்!

Thu Apr 18 , 2024
World Heritage Day: உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை, கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் இன்று கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது. உலகெங்கும் அமைந்துள்ள பாரம்பரிய சின்னங்களை அந்தந்த நாடுகள் பாதுகாத்து போற்றிக்கொண்டாடுவதோடு அதன் பெருமைகளை வளரும் தலைமுறைகளுக்கு தெரிவிக்கும் வகையில் உலக பாரம்பரிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மனித வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவைகளை கொண்டாடும் வகையிலும் போற்றி பாதுகாக்கும் வகையிலும் சர்வதேச அளவில் பல்வேறு […]

You May Like