TVK Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்…!

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் நடிகராகா வளம் வருபவர் தளபதி விஜய். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தன்னுடைய திரைப்பட விழாக்களில், அரசியல் குறித்து அதிகம் பேசி வந்த விஜய்.. கடந்த இரண்டு வருடமாக அரசியலில் கால் பதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக தன்னுடைய கட்சியின் பெயரை, தமிழக வெற்றி கழகம் என தேர்தல் ஆணையத்தில் புஸ்ஸி ஆனந்த் மூலம் பதிவு செய்தார்.

விஜய்யின் இந்த அதிரடி முடிவு பலரையும் வியப்படைய வைத்தது. இது குறித்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சியை அதிகாரப்போறவைமாக் அறிவித்தார் விஜய். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனவும் அவர் கூறினார். இதனை ஒட்டியே அரசியல் செயல்பாடுகளை நகர்த்தி வருகிறார் விஜய். தனது கட்சி சார்பாக விரைவில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், அதன் மூலம் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க திட்டம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்பட்டு, உறுப்பினர் சேர்க்கையாயி தொடக்கி வைத்தார் நடிகர் விஜய். மேலும் கட்சியில் சேர அனைவருக்கும் அழைப்பும் விடுத்துள்ளார், அதோடு உறுதிமொழியும் வெளியிட்டிருக்கிறார். உறுதிமொழி பிடித்திருந்தால் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் முதல் ஆளாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டுள்ளார்.

Kathir

Next Post

நீங்கள் தினமும் குடிக்கும் தேநீரில் இந்த பொருளை மட்டும் சேர்த்து குடித்து பாருங்கள்.!?

Fri Mar 8 , 2024
பொதுவாக நம்மில் பலருக்கும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். பலருக்கும் காபியை விட தேநீர் குடிப்பது என்பது மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. டீ என்று கேட்டாலே டீ பிரியர்களுக்கு மனதில் உற்சாகம் பொங்கும். மேலும் டீ பிரியர்களுக்கு குளிர்காலத்திலும் சரி, வெயில் காலத்திலும் சரி டீ குடிப்பது எப்போதுமே சலிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தேநீரை அதிக அளவு எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற […]

You May Like