தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசு பள்ளிக்கு அருகே புதிதாக அமைக்கப்பட்ட மதுபான கூட்டத்தை அகற்ற கோரி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டதை கண்டித்தும், அந்த பாரை உடனடியாக மூட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்திருந்த நிலையில் அதையும் மீறி போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றதால் போலீசுக்கும் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் முற்றுகையிட வந்தவர்களை தடுக்க முயன்ற மகேந்திரமங்கலம் போலீஸ் ஏட்டு அருள் என்பவரது கையை தவெக தொண்டர் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் காவலருக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், காவலரின் கையை கடித்த தவெக ஒன்றிய கொள்கை பரப்பு அணி நிர்வாகி ஜெமினி உள்ளிட்ட 4 பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஏற்கெனவே தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் சுயக் கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் தொடர் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் மீண்டும் அந்தக் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் குறித்து கேள்விக்குறி எழுப்பியுள்ளது.
Read more: கல்லீரலை சேதப்படுத்தும் இந்த காலை உணவுகளை சாப்பிடாதீங்க.. அப்புறம் விபரீதமாயிடும்..!!



