2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார்.
புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 9ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த தமிழக வெற்றிக்கழகம் அனுமதி கோரியுள்ள நிலையில், சென்னையில் உள்ள WAR ROOM இல் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை நடத்தினார். பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் இனி பொது கூட்டமாகவே பரப்புரையை தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் திமுக மற்றும் அதிமுக முக்கிய புள்ளிகள் சிலரை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைப்பது குறித்தும் செங்கோட்டையன் ஆலோசித்துள்ளார். செங்கோட்டையனின் ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய புள்ளிகளை விஜய் கட்சியில் இணைப்பதில் தீவிரம் காட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
Read more: திமுக அரசை உடனே கலைக்க வேண்டும்..!! சுப்பிரமணியன் சுவாமி போட்ட பரபரப்பு பதிவு..!! நடந்தது என்ன..?



