அருப்புக்கோட்டை அருகே மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பழனி நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
அருப்புக்கோட்டையில் மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் பாலையம்பட்டி பகுதியில் அதிகாலை 5 மணியளவில் கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நெர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 2 லாரி டிரைவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களின் அடையாளங்கள் அல்லது மேலும் தனிப்பட்ட விவரங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களும் கனரக வாகனங்கள் என்பதால், மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது. விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில் நடந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Read more: விசிகவுக்கு புதிய பொதுச்செயலாளர்..? தலித் அல்லாத ஒருவருக்கு பதவி வழங்க திருமா முடிவு..!!