திருவண்ணாமலை மாவட்டத்தில், போலி நகையை அடகு வைக்க முயன்ற இரண்டு பெண்கள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களில், வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் போலி நகை அடகு வைப்பது அதிகரித்து வருகிறது. சிலர் தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை நகைகளை கொண்டு வந்து, உண்மையான தங்கம் போலக் காட்டி கடன் பெற முயல்கின்றனர். இதுகுறித்து வங்கிகள் நகை மதிப்பீட்டாளர்களை கொண்டு கடுமையான சோதனை நடத்தி வந்தாலும், சில சமயங்களில் ஊழியர்கள் கூட்டுச் செயலால் கோடிகளில் மோசடி நடக்கிறது.
அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த புனிதா (39), வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த சுமதி (42) ஆகியோர், அழகுசேனை கிராமத்தில் உள்ள வங்கிக்கு சென்று 22 கிராம் எடையுடைய தங்க நகைகளை அடகு வைக்க முயன்றுள்ளனர். ஆனால், வங்கி மேலாளர் நகைகளை பரிசோதித்தபோது அவை போலி தங்க நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக போலீசில் புகார் செய்தார்.
தொடர்ந்து நகைகளை சோதனை செய்து பார்த்த போது, போலி நகைகள் என்பது அவருக்கு தெரியவந்தது. அவர் உடனே போலீசுக்கு புகார் அளித்தார். இதன் பேரில் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து புனிதா, சுமதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.