குட் நியூஸ்…! மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் பட்டம் வழங்க வேண்டும்…! யுஜிசி அதிரடி உத்தரவு…!

UGC 2025

யுஜிசி விதியின்படி மாணவர்கள் பட்டம் பெற தகுதி பெற்ற 180 நாட்களுக்குள், அவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: நாட்டில் உள்ள சில உயர்கல்வி நிறுவனங்கள், உரிய காலக்கட்டத்துக்குள் பருவத் தேர்வுகளை நடத்துவதில்லை.பட்டப் படிப்பு சான்றிதழ்களையும் வழங்கவில்லை என்றும் யுஜிசியின் கவனத்துக்கு புகார் வந்துள்ளது. இந்த தாமதம் மாணவர்கள் தகுதியான வேலை வாய்ப்புகளை பெறவும், உயர்கல்விக்கும் இடையூறாக இருக்கிறது.

யுஜிசி விதியின்படி மாணவர்கள் பட்டம் பெற தகுதி பெற்ற 180 நாட்களுக்குள், அவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

புயல் பாதிப்பு காரணமாக இரண்டு மாவட்டத்தில் இன்று விடுமுறை...!

Mon Dec 1 , 2025
புயல் பாதிப்பு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. அப்போது புயலுக்கும், வடதமிழக கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 70 கி.மீ. ஆக இருந்தது. தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நகர்ந்த […]
Rain School 2025

You May Like