கொளுந்துவிட்டு எரியும் உக்ரைன்!. 728 ட்ரோன்கள், 13 ஏவுகணைகள் மூலம் தாக்கிய ரஷ்யா!. வீடியோவை பகிர்ந்த ஜெலென்ஸ்கி!.

உக்ரைன் முழுவதிலும் 728 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.


உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொடுவர தீவிர முயற்சிகள் நடந்து வந்தாலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தவில்லை. இந்நிலையில், நேற்று உக்ரைன் மீது 728 ட்ரோன்களையும், 13 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதலில் உக்ரைனின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பற்றி எரிந்த நிலையில், மீட்புப் பணிகள் நடைபெறும் வீடியோவையும், ஒரு பதிவையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் விமானப்படை பதிவில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான இடைவிடாத மோதலில் காணப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் இது என்று குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா 741 வான்வழி ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது. அதன்படி, 728 ட்ரோன்கள், 7 இஸ்கந்தர்-கே க்ரூஸ் ஏவுகணைகள், 6 கின்ஹால் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 718 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தாக்கி அழித்துவிட்டதாக உக்ரைன் விமானப்படையின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை என்றும், அவர்கள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதலில் தீப்பற்றி எரியும் கட்டிடங்களில் மீட்புப் பணி நடைபெறும் வீடியோவை பகிர்ந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஒரே நாளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இது என்று தெரிவித்துள்ளார். 741 இடங்களை குறிவைத்து, பல்வேறு வகையான 728 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பினால் வீழ்த்தப்பட்டதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள அவர், லட்ஸ்க் பகுதியை குறி வைத்தே முக்கிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், உக்ரைனின் நட்பு நாடுகள் முன்வந்து தாக்க வேண்டும், பலத்தால் அல்ல, அழுத்தத்தால் தாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

ரஷ்யா புதிய தாக்குதல்களைத் தொடங்குவதற்குப் பதிலாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி சிந்திக்க வைக்கும் வகையில் அழுத்தத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எங்கள் கூட்டாளிகளுக்குத் தெரியும் என்று அவர் மேலும் கூறினார்.

KOKILA

Next Post

ஷாக்!. நிர்வாணப்படுத்தி மாணவிகளிடம் மாதவிடாய் சோதனை!. பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் மீது பாய்ந்த நடவடிக்கை!.

Thu Jul 10 , 2025
தானேவில் மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தனியார் பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில், ஷாஹாபூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று காலையில், பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், 5 முதல் […]
thane checking girls periods 11zon

You May Like