Crime | அக்காவை பார்க்க ஓடோடி வந்த தங்கையை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த மாமா..!! ஆசைக்கு இணங்க மறுத்ததால் அடித்து துரத்திய கொடூரம்..!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த பெரியசோகை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமண வாழ்க்கை முதல் 4 ஆண்டுகள் சந்தோஷமாக சென்றது.

ஆனால், கடந்த ஓராண்டாக சுரேஷ் குமார், தனது காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சுரேஷ்குமார் தனது மனைவியை அடித்து கொடுமை படுத்தத் தொடங்கி உள்ளார். இதற்கிடையே, காதல் மனைவியின் தங்கையான 21 வயது இளம் பெண், தனது அக்காவை பார்ப்பதற்காக சுரேஷ்குமாரின் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். அவ்வபோது வீட்டிற்கு வரும் மனைவியின் தங்கையை, சுரேஷ்குமார் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து, அப்பெண்ணை மிரட்டி அவ்வபோது தனது ஆசைக்கு இணங்கச் செய்துள்ளார். மேலும், காதல் திருமணம் செய்து கொண்ட சுரேஷ் குமாருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததை சுட்டிக் காட்டிய சுரேஷ் குமார், உனது தங்கையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை சுரேஷ் குமார் அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அக்கா, தங்கை இருவரும் இது தொடர்பாக ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளிக்கப்பட்டதை அறிந்த சுரேஷ் குமார் உடனடியாக தலைமறைவானார். அவரது செல்போன் எண் மூலம் காவல்துறை அதிகாரிகள் சுரேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : நாம் தமிழர் கட்சிக்கு பாய்மர படகு சின்னம்..!! தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்த சீமான்..!! இன்று அறிவிப்பு..!!

Chella

Next Post

Salary | இனி வாழ்நாள் ஊதியம்..!! 2025இல் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்..!! பணம் கொட்டப்போகுது..!!

Mon Mar 25 , 2024
இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை, வாழ்நாள் ஊதியமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ.,வை உருவாக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சர்வதேச அளவில் தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்திற்கு ஐ.எல்.ஓ., ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, தற்போது தொழிலாளர்கள் வாங்கி வரும் குறைந்தபட்ச […]

You May Like