மத வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணம் நிர்ணயம்…! தமிழக அரசு தகவல்…!

Tn Govt 2025

தமிழகத்தில் கோயில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


மத வழிபாட்டு தலங்களின் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே தகவல் பரப்பப்படுகிறது. இது வதந்தி. தமிழகத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் ‘பொது வழிபாட்டு தலங்கள்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத வழிபாட்டு தலங்களின் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே தகவல் பரப்பப்படுகிறது. இது வதந்தி. தமிழகத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் ‘பொது வழிபாட்டு தலங்கள்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு கட்டண விதிப்பின்படி, கோயில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட பொது வழிபாட்டு தலங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.6.20 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் 120 யூனிட்டுக்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.3.13 அளிக்கப்படுகிறது. எனவே, வதந்தியை பரப்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: மனித மண்டை ஓடுகளால் கோபுரங்களைக் கட்டிய கொடூர மன்னர்கள் யார் யார்? வரலாற்றின் இருண்ட பக்கங்கள்..

Vignesh

Next Post

நாடுமுழுவதும் பள்ளிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அவசர உத்தரவு!. மத்திய அரசு அதிரடி!.

Sun Jul 27 , 2025
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் சமீபத்தில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து ஏழு மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு குறியீட்டின்படி, […]
safety schools central govt 11zon

You May Like