எதிர்பாராத விதமாக தனது மனைவியின் தொலைந்து போன செல்போனை மீட்டெடுக்க UPI எவ்வாறு உதவியது என்பது குறித்து ஒருவர் Reddit இல் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அவரின் பதிவில் “இன்று நானும் என் மனைவியும் ஒரு அதிசயத்தை அனுபவித்தோம். இன்று நாங்கள் பேட்டரி ரிக்ஷாவில் ஷாப்பிங் செய்தோம். நான் ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்துவிட்டுச் செல்லும்போது, எப்படியோ என் மனைவி தனது செல்போனை மறந்து வைத்துவிட்டார்… அதை நாங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டோம்.
அதில் சிம் கார்டு இல்லை.. அதாவது அவர்களால் அந்த எண்ணை அழைக்க முடியவில்லை. முதலில், அது திருடப்பட்டதாக நாங்கள் நினைத்தோ. பின்னர் அது இன்னும் ரிக்ஷா ஓட்டுநரிடம் இருக்கலாம் என்பதை உணர்ந்தோம். இருப்பினும், பணம் செலுத்தியதில் இருந்து எங்களுக்கு கிடைத்த ஒரே விவரம் ஓட்டுநரின் UPI ஐடி மட்டுமே, அவரது தொடர்பு எண் அல்ல.
சரி.. செல்போன் தொலைந்துவிட்டது என்று நினைத்த போது, அந்த நபருக்கு திடீரென்று ஒரு ரூபாய் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக ஒரு அறிவிப்பு வந்தது. அது அதே ஆட்டோ ஓட்டுநரிடமிருந்து வந்தது, அதனுடன் “தயவுசெய்து (அவரது தொடர்பு எண்ணை) அழைக்கவும்” என்று ஒரு செய்தி வந்தது.
“நான் உடனடியாக அவரை அழைத்தேன், அவர் எனது அழைப்பிற்காகக் காத்திருந்தார். நான் எங்கிருந்தாலும் அங்கேயே இருக்க சொன்னார்.. பின்னர் மொபைல் போனை எங்களிடம் கொடுத்தார். அவருக்கு போதுமான நன்றி சொல்ல முடியவில்லை, ஆனால் அவருக்கு கொஞ்சம் பணமாகப் பணம் கொடுத்தார். என் மனைவியின் தொலைபேசியைத் திரும்பக் கொண்டு வந்தது UPI தான்.. ஏனெனில் நான் அவருக்கு UPI அல்லாமல் ரொக்கமாக பணம் செலுத்தியிருந்தால் அவர் என்னுடன் தொடர்பு கொள்ள வழி இல்லை. எனது கண்களையே என்னால் நம்பமுடியவில்லை..” என்று குறிப்பிட்டுள்ளார்..
இந்தப் பதிவுக்கு பல ரெடிட் பயனர்கள் கருத்து பதிவிட்டு வந்தனர்.. அவர்களில் பலர் ஓட்டுநரின் நேர்மை மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு இரண்டாலும் ஈர்க்கப்பட்டனர்.
ஒரு பயனர், ” நல்ல விஷயம். நல்ல ஆட்டோ ஓட்டுநர்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், “மாற்று தலைப்பு – ஆட்டோ ஓட்டுநர் என் மனைவியின் தொலைபேசியைத் திரும்பப் பெற உதவினார்” என்று குறிப்பிட்டார்.
“ஆட்டோ ஓட்டுநருக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது” என்று வேறொரு பயனர் கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “இது UPI அல்ல, ஓட்டுநரின் நேர்மை” என்று பதிலளித்தார். இன்னும் சிலர், “முடிந்தால் ஆட்டோ ஓட்டுநருக்கு டிப்ஸ் கொடுக்க முயற்சி செய்யுங்கள். கடவுள் அவரை ஆசீர்வதிப்பாராக” என்று கூறி, ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டினர்.
Read More : இந்த 3 நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி! ஜிஎஸ்டியால் மிகப்பெரிய நிவாரணம்!



