யூனிபைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பயன்பாட்டுக்கான முன் அனுமதிக்கப்பட்ட கடன் வரம்புகள் (pre-sanctioned credit lines) ஆகஸ்ட் 31 முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, பயனாளர்கள், நிலையான வைப்பு (Fixed Deposits), பங்கு (Shares), பத்திரங்கள் (Bonds) அல்லது ஓவர்டிராஃப்ட் கடன்கள் (Overdraft Loans) ஆகியவற்றைக் கொண்டு ஆதரிக்கப்படும் கடன் வரம்புகளைத் தங்களின் UPI செயலிகளில் இணைக்க முடியும். இது, பயனாளர்களுக்குப் பணம் செலுத்துவதில் கூடுதல் வசதியையும், பல்வேறு நிதி ஆதாரங்களை ஒரே இடத்தில் பயன்படுத்தும் வசதியையும் வழங்குகிறது.
அதாவது, இந்த புதிய விதி மூலம் வாடிக்கையாளர்கள் முன் அனுமதிக்கப்பட்ட கடன் வரம்புகளிலிருந்து நிதியை நேரடியாக எடுத்துக்கொண்டு, Google Pay, PhonePe, Paytm போன்ற UPI பிளாட்ஃபாரங்களில் பணம் செலுத்த முடியும் என்பதாகும். இது வங்கிக்கடன்கள் அல்லது ஓவர்டிராஃப்ட் வசதிகளைப் பயன்படுத்துவதைவிட வேகமாகவும், எளிதாகவும் இருக்கும். இந்த நடைமுறையால், கடன் பயன்பாட்டை UPI பில்களுடன் நேரடியாக ஒருங்கிணைக்கும் புதிய வழி உருவாகிறது.
முந்தைய நிலவரப்படி, இவ்வகை கடன் வரம்புகள் மூலமாக பயனாளர்கள் வணிகர்களுக்கே (person-to-merchant) மட்டும் பணம் செலுத்த முடிகிறது. ஆனால் புதிய விதிமுறைகளின்படி, பயனாளர்கள், பணத்தை எடுக்கவும் (ATM அல்லது உரிய செயலிகள் மூலம்) மற்ற நபர்களுக்கு பணம் அனுப்பவும் (person-to-person transfers), சிறு வணிகர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தவும், UPI வழியாகவே மேற்கொள்ள முடியும்.
அதாவது, வழக்கமாக பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை யுபிஐ ஆப்கள் மூலம் பயன்படுத்தும்போது, கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிவிட்டு, ஸ்கேன் & பே (Scan & Pay) செய்வோம். அதேபோல உங்களது மற்றொரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு செல்ஃப்-டிரான்ஸ்பர் (Self-transfer) செய்வோம். யுபிஐ ஐடிக்கு பணத்தை அனுப்புவோம்.
மேலும், யுபிஐ ஐடி இல்லாமல் பணத்தை அனுப்ப உங்களது கூகுள் பே, போன் பே அல்லது பேடிஎம் போன்ற ஏதாவது ஒரு ஆப் மூலம் பேங்க் அக்கவுண்ட் (Bank Account) நம்பர் மற்றும் ஐஎப்எஸ்சி (IFSC) கோட் ஆகியவற்றை கொடுத்து பணத்தை பரிமாற்றம் செய்வோம். இந்த ஒட்டுமொத்த யுபிஐ பரிவர்த்தனைகளையும் இனிமேல் கிரெடிட் லைன்களில் செய்யலாம்.
இந்த புதிய விதிகள் மூன்றாம் தர ஆப் புரொவைடர்களான (Third Party App Providers) யுபிஐ ஆப்களுக்கு மட்டுமல்லாமல், முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்களின் சேவையை கொடுக்கும் பேங்குகளும் (Banks) அமலாகி இருக்கின்றன. இதுபோக பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்களுக்கும் (Payment service Providers) இந்த விதிகள் அமல் செய்யப்பட்டுள்ளன.
ஆகவே, எந்தவொரு சிக்கலும் இல்லாமல், முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்களை பெறும் கஸ்டமர்கள் அவர்களது பரிவர்த்தனைகளை கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் புதிய மாற்றத்தை கொண்டுவருகிறது.
அதாவது, ஆதார் கார்டு வாங்கிய பிறகு அதில் 10 வருடங்களுக்கும் மேல் எந்த அப்டேட்டையும் செய்யாமல் இருக்கும் நபர்களுக்கு இந்த மாற்றம் வர இருக்கிறது. இவர்கள் அடையாளச் சான்று (Identity Proof) மற்றும் முகவரி சான்று (Address Proof) ஆகியவற்றை ஆதார் போர்ட்டலில் அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு செப்டம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது.
Readmore: மகிழ்ச்சி…! வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைப்பு…!