நூற்றில் 75 சதவீதம்பேர் அனுபவிக்கும் பிரச்சனை பொடுகுத்தொல்லை. அக்கம்பக்கத்தில் அத பண்ணுங்க, இத பண்ணுங்கனு சொல்லி சொல்லியே நாம ஆயிரம் சோதனையையாவது செய்திருப்போம். ஆனா, இந்த எளிய முறை உங்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கும்.
தேங்காய் எண்ணெயும், வெங்காய சாறும் பொடுகு தொல்லையை போக்க உதவுவதாக கூறப்படுகிறது. எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை பார்க்கலாம்.
தேங்காய் எண்ணால் முடியின் வேர்களில் ஆழமாக சென்று எண்ணெய் பதத்தை தக்க வைத்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதாக ஆய்விலேயே கூறப்பட்டுள்ளது. அதோடு தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் வேர்களை தாக்கும் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவுவதாக கூறப்படுகின்றது. தேங்காய் எண்ணெயை சூடேற்றி சற்று வெதுவெதுப்பான பதத்தில் இருக்கும்போது பஞ்சில் நனைத்து வேர்களில் படும் படி தடவி மசாஜ் செய்துவிட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்துவிட்டு பின்னர் குளித்தால் பொடுகு வராது.

மற்றொரு முறையில் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து வேர்களில் படும்படி தடவி ஊற வைத்து குளிக்கலாம். வெங்காயம் தலைமுடி வளர்ச்சியை தூண்டுவதற்கு உதவுகிறது. அதோடு பொடுகு அரிப்புக்கு நல்ல தீர்வு. வேர்களின் பூஞ்சை தொற்று, வறட்சி என பொடுகுக்கு காரணமான பிரச்சனைகளை சரி செய்ய வெங்காய சாறு உதவுகிறது.
வெங்காயச்சாறு பயன்படுத்துவது எப்படி?
2 : 1 என்ற கணக்கில் வெங்காய சாறு மற்றும் எலுமிச்சை சாறை கலந்துகொள்ளுங்கள். பின் அதை உங்கள் தலைமுடி வேர்களில் நன்கு படும்படி தடவி மசாஜ் செய்யுங்கள். பின் 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை நன்றாக கழுவி விடுங்கள்.

கற்றாழை மற்றும் வெங்காய சாறை கலந்து அதை வேர்களில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் குளிக்க பொடுகு மறையும். இரண்டையும் ஒன்றாக கலந்து வேர்களில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் கழுவ பொடுகை போக்கலாம்.