தேர்தல் பணிக்காக வந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் விபத்து..? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

ஆவடி துணை ராணுவ பயிற்சி மையத்தைச் சேர்ந்த 71 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பயிற்சி முடித்து விட்டு மீண்டும் இன்று 5 ராணுவ வாகனத்தில் ஆவடி பயிற்சி மையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆம்பூரை அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் துணை ராணுவ வீரர்கள் ஓட்டி வந்த வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது.

இந்த விபத்தில், 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும், வாகனத்தை ஓட்டிச் சென்ற ரிஜோ மற்றும் சின்னதுரையின் கால் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி துண்டானது. பின்னர், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் லாரியின் இடிபாடுகளிலிருந்து சக வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அரசு மருத்துவமனையில் தலைமை காவலர் ராமச்சந்திரன் மற்றும் காவலர் வல்லவன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : ஐ.பெரியசாமி வழக்கில் திடீர் திருப்பம்..!! லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Chella

Next Post

மீண்டும் நொந்துபோன Senthil Balaji..!! 27-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

Mon Mar 18 , 2024
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 27-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக, ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினா் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனா். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மார்ச் 18 (இன்று) திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. இந்நிலையில், புழல் சிறையில் இருந்து […]

You May Like