Gold Rate: சரசரவென குறைந்த விலை..! தங்கம் வாங்க இதுவே சரியான தருணம்..! முழு விவரம்…

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.250 குறைந்து ரூ.54,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 54,960ஆக இருந்த நிலையில், இன்றைய தினம் (ஏப்ரல் 18) சவரனுக்கு ரூ.250 குறைந்து ரூ.54,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.6,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்பட்ட நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது, இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியில் விலை ரூ.90-க்கும், 1கிலோ வெள்ளியின் விலை ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்பட்டது வருகிறது.

Kathir

Next Post

’எதுக்கு வீடியோ எடுக்குறீங்க’..? டென்ஷன் ஆன நடிகை கனகா..!! தற்போதைய நிலையை பாருங்க..!!

Thu Apr 18 , 2024
நடிகை கனகாவிடம் யூடியூபர் ஒருவர், அவர் வீட்டு வாசலில் வைத்து உங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டபோது அதற்கு கோபமாக கனகா பதில் அளித்திருந்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 80 காலகட்டத்தில் தொடங்கி 90ஸ் காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகை கனகா, சினிமாவை விட்டு திடீரென விலகினார். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர்களாக மாறிய இளைஞர்கள் ஏராளம். […]

You May Like