கால்நடை மருத்துவ கவுன்சில் தேர்தல்…! வேட்புமனு தாக்கல் செய்ய 26-ம் தேதி கடைசி நாள்…!

இந்திய கால்நடை கவுன்சில் சட்டம், 1984 (1984 இன் 52) இன் பிரிவு 3 இன் உட்பிரிவு (ஜி) உடன், இந்திய கால்நடை கவுன்சில் விதிகள், 1985 இன் விதிகள் 10 மற்றும் 11 இன் படி, இந்திய கால்நடை கவுன்சிலின் 11 உறுப்பினர்களின் தேர்தலை 25 அக்டோபர் 2023 -வது தேதியிட்ட எஸ்.ஓ 4701 (இ) அறிவிக்கையின் மூலம் மத்திய அரசு அறிவித்தது. தற்போது, டெல்லி உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், இந்திய கால்நடை கவுன்சிலின் இந்திய கால்நடை மருத்துவர்கள் பதிவேட்டில் பதிவு செய்துள்ள நபர்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் தேதிகளை நிர்ணயித்துள்ளார்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி நீதியரசர் (திருமதி) ஆஷா மேனன் (ஓய்வு), கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைக்கான தேர்தல் அதிகாரி, கேபின் எண் 5, சந்திரா லோக் கட்டிடம் (2வதுதளம்), ஜன்பத் சாலை, புது தில்லி, என்ற முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தங்கள் வேட்புமனுவை அனுப்பலாம் அல்லது நேரில் வழங்கலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் வேட்பு மனுக்களை ஆன்லைனில் (வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் / வழிமொழிபவரின் தெளிவான கையொப்பம் கொண்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியில் மாலை 5.00 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மின்னஞ்சல் ஐடி: ro.vcielection[at]gmail[dot]com இல் சமர்ப்பிக்கலாம். 26.04.2024 மாலை 5.00 மணிக்குப் பிறகு வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Vignesh

Next Post

மியான்மரில் பயங்கர மோதல் ; ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்தில் தஞ்சம்!

Sun Apr 21 , 2024
மியான்மரில் கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்நாட்டின் எல்லையில் வசித்த 1,300க்கும் மேற்பட்டோர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நம் அண்டை நாடான மியான்மரில், அந்நாட்டு ராணுவத்திற்கும், பூர்வகுடிகளான காரேன் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நிழவி வருகிறது. நேற்று முன்தினம் ராணுவ வசமிருந்த அந்நாட்டின் எல்லை நகரான மியாவாடியை கைப்பற்றும் நோக்கில் கிளர்ச்சியாளர்கள், அப்பகுதியின் மீது ஆளில்லா விமானங்களின் வாயிலாக தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, […]

You May Like