Rape: அதிரும் புதுச்சேரி!… மாநிலம் முழுவதும் இன்று பந்த்!… கடைகள் அடைப்பு!… பேருந்துகள், ஆட்டோர் ஓடாது!

Rape: புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று (மார்ச் 8) பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் முத்தியாழ்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், காவல் நிலையம் முற்றுகை ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் இன்று பந்த் போராட்டம் அறிவித்துள்ளன. போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது. இதேபோல், மேலும் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பிலும் இன்று பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. பந்த் போராட்டம் அறிவித்துள்ளதால் இன்று புதுச்சேரியில் கடைகள் இயங்காது, பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போ உள்ளிட்டவைகளும் ஓடாது. சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

Readmore: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு எப்போது வெளியீடு..! முழு விவரம்..!

Kokila

Next Post

Holiday: இன்றுமுதல் 3 நாட்கள் வங்கிகள் விடுமுறை!… எந்த மாநிலங்களில் தெரியுமா?

Fri Mar 8 , 2024
Holiday: மகாசிவராத்திரியை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படுகின்றன. விடுமுறை நாட்களை மாநில அரசுகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானிக்கின்றன. மார்ச் 2024 இல், மாநிலங்கள் முழுவதும் உள்ள வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் காட்டுகிறது. இந்த மாதத்தில் வங்கியின் பாதிநாட்கள் விடுமுறை என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது வர்த்தகம், தொழில், தனித் […]

You May Like