10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு எப்போது வெளியீடு..! முழு விவரம்..!

10th public exam | ஆண்டுதோறும் மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். வரும் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8 ஆம் தேதி வரைநடைபெற இருக்கிறது. 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு
கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற்றது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி பிற்பகல் முதல் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுதேர்விற்கான பெயர் பட்டியலில் திருத்தம் ஏதேனும் இருந்தால் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயரை பட்டியலில் உரிய திருத்தங்களை செய்து கொள்ளாலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

Rape: அதிரும் புதுச்சேரி!… மாநிலம் முழுவதும் இன்று பந்த்!… கடைகள் அடைப்பு!… பேருந்துகள், ஆட்டோர் ஓடாது!

Fri Mar 8 , 2024
Rape: புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று (மார்ச் 8) பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் முத்தியாழ்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், […]

You May Like