தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது.. இதன் மூலம் 59 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கபப்ட்டுள்ளது.. முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடிய தவெக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது.
ஆனாலும் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தவெகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.. அதாவது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க முடியும்.. ஆனால் தவெக 108 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது.. எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது..
திமுக மட்டும் தனித்து 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் வீதம் 4 இடங்களும், தேமுதிகவுக்கு 1 இடமும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 2 இடங்களும், விசிகவுக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன..
இந்த தேர்தலில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் பிரேமலதா விஜயகாந்த் மட்டுமே விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.. இந்த நிலையில் விருத்தாச்சத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.. மேலும் “விஜய் எங்கள் வீட்டு பிள்ளை அவரது வெற்றிக்கு வாழ்த்துகள் என்று பிரேமலதா தெரிவித்தார்.. மேலும் புதிதாக ஆட்சி அமைக்கப் போகிறவர்களுக்கு எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகள். விஜய் எங்களுக்கு புதியவர் கிடையாது, பக்கத்து வீட்டில் இருந்தவர், கேப்டனோடு ஆரம்பம் முதல் வாழ்ந்தவர்.. விஜய் நல்லபடியாக ஆட்சி அமைக்கட்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்..” என்று தெரிவித்தார்..
தவெகவுக்கு ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியில் உள்ளோம் எண்று தெரிவித்தார்..
Read More : BREAKING| முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்..!



