“விஜய் குதிரை பேரம் நடத்துகிறார்.. அமமுக எம்.எல்.ஏவை காணவில்லை..” டிடிவி தினகரன் ஆளுநரிடம் பரபரப்பு புகார்..!

vijay ttv

தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.. இன்று இரவு ஆளுநரை சந்தித்த அவர் தமிழகத்தில் தவெக குதிரை பேரம் நடத்துவதாக ஆளுநரிடம் புகார் அளித்தார்.. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” இந்த தேர்தலில் அமமுக அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் போட்டியிட்டோம்.. நாங்கள் போட்டியிட்ட 11 தொகுதிகளில் மன்னார்குடி தொகுதியில் எஸ்.காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. அவர் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கூறி ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளனர்.. இது குதிரை பேரமாகவே இருக்க வேண்டும்..


தவெக தலைவர் விஜய் குதிரை பேரம் நடத்துகிறார்.. அமமுக மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ இன்று மாலையில் இருந்து எங்கே சென்றா என்று தெரியவில்லை.. காமராஜை தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.. இதுகுறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன்..

எங்கள் காமராஜுக்கும் விஜய்க்கும் என்ன சம்மந்தம் உள்ளது.. குதிரை பேரம் நடத்தும் விஜய் தான் ஒரு தூய சக்தி என்பதை எப்படி சொல்ல முடியும்..? தூய சக்தி என்று கூறிக்கொண்டு எதிரணியில் இருந்து எம்.எல்.ஏக்களை வசப்படுத்துவது சரியான அரசியலா..? தமிழ்நாட்டில் இதை கேள்விப்பட்டதுண்டா.. இதுகுறித்து ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன்..” என்று தெரிவித்தார்..

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4, என தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.. எனினும் பெரும்பான்மைக்கு போதிய இடம் கிடைக்காததால் விஜய் முதல்வராக பதவியேற்பாரா என்பதில் மீண்டும் குழப்பம் நீடிக்கிறது..

Read More : தவெகவுக்கு ஆதரவு இல்லை.. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திட்டவட்டம்..! விஜய் பதவியேற்பதில் மீண்டும் சிக்கல்..?

RUPA

Next Post

விஜய் முதல்வராவாரா..? நிமிடத்திற்கு நிமிடம் மாறும் கணக்கு.. அடுத்த 24 மணி நேரம் தமிழக அரசியலில் செம ட்விஸ்ட்!

Sat May 9 , 2026
Will Vijay be the first? The account changes minute by minute.. The next 24 hours will be a big twist in Tamil Nadu politics!
tn politics

You May Like