விஜய் முதல்வராவாரா..? நிமிடத்திற்கு நிமிடம் மாறும் கணக்கு.. அடுத்த 24 மணி நேரம் தமிழக அரசியலில் செம ட்விஸ்ட்!

tn politics

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு இன்னும் முழுமையாக கிடைக்காததால், அரசியல் களம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.


காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து தவெக பலம் 113 ஆக உயர்ந்தது. பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு கடிதம் வழங்கியதால் எண்ணிக்கை 117 ஆக சென்றது. இருப்பினும், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் இருப்பதுடன், சபாநாயகர் தேர்வு உள்ளிட்ட காரணங்களால் இன்னும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு அவசியமாகியுள்ளது.

இதனால் தான் ஆளுநர் ஆர்.என். அர்லேகர் இதுவரை விஜய்யை ஆட்சியமைக்க அதிகாரப்பூர்வமாக அழைக்கவில்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. “118 எம்.எல்.ஏ.க்களின் உறுதியான ஆதரவு அவசியம்” என்ற நிலைப்பாட்டை ஆளுநர் மாளிகை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் முடிவு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. விசிகவின் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்தால் தவெக பெரும்பான்மையை எட்டும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்த விசிக நிர்வாகிகள், கடந்த முறை விசிகவுக்கு கிடைத்த பல வாக்குகள் இந்த முறை தவெகவுக்கு மாறியிருப்பதை ஒரு தரப்பு சுட்டிக்காட்டுகிறது.

இதனால் விசிகக்குள் இருவிதமான கருத்துகள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. “விஜய்யை எதிர்ப்பது அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்” என்று ஒரு தரப்பு ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி வருவதாகவும், “திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது ஆபத்து” என்று மற்றொரு தரப்பு எச்சரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திருமாவளவனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நடத்திய நள்ளிரவு அரசியல் நடவடிக்கைகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமமுக எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் தவெகவுக்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் அது போலி கடிதம் என தினகரன் தரப்பு குற்றம்சாட்டியது. ஆனால் அதற்கு பதிலடியாக தவெக தரப்பு வீடியோ வெளியிட்டு, “காமராஜ் தன்னிச்சையாகவே ஆதரவு அளித்தார்” என்று விளக்கம் அளித்தது.

அதேநேரத்தில் அதிமுகவிலும் பதற்றம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில முக்கிய நிர்வாகிகள் தனியாக நகர்கிறார்களா என்ற சந்தேகம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. “தவெகவுக்கு ஆதரவு சென்றால் அதிமுக சிதறும்” என்ற அச்சம் காரணமாக சில எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தரப்பிலும் விஜய் குறித்து கவலை அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய் ஒருமுறை ஆட்சியில் அமர்ந்துவிட்டால், எம்.ஜி.ஆர் போல நீண்டகால அரசியல் சக்தியாக மாறக்கூடும் என்ற அச்சம் கட்சிக்குள் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தரப்பு தன்னம்பிக்கையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. “மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் மீண்டும் தேர்தலை சந்திக்க தயார்” என்று விஜய் கட்சிக்குள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியல் அடுத்த 24 மணி நேரத்தில் எந்த திசையில் நகரும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. விஜய் முதல்வராவாரா? விசிக எந்த முடிவு எடுக்கும்? ஆளுநரின் அடுத்த நகர்வு என்ன? என்ற கேள்விகளுடன் அரசியல் களம் முழுவதும் பரபரப்பு நீடித்து வருகிறது.

Read more: “விஜய் குதிரை பேரம் நடத்துகிறார்.. அமமுக எம்.எல்.ஏவை காணவில்லை..” டிடிவி தினகரன் ஆளுநரிடம் பரபரப்பு புகார்..!

English Summary

Will Vijay be the first? The account changes minute by minute.. The next 24 hours will be a big twist in Tamil Nadu politics!

Next Post

சொகுசுக் கப்பலில் பரவிய ஹன்டா வைரஸ்.. இந்தியா முழுவதும் அலர்ட்! WHO வெளியிட்ட முக்கிய தகவல்..!

Sat May 9 , 2026
Union Health Ministry activates precautionary surveillance measures even as Hantavirus cases pose low global risk to public health
Hantavirus 1

You May Like