தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிருகிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 வேர்பாளர்களையும் இன்று ஒரே மேடையில் விஜய் அறிமுகம் செய்கிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வேட்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி மேடைக்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கொள்கை தலைவர்களுக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் விஜய் உரையாற்றினார். அவர் பேசுகையில், “திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் திமுகவில் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். அனுபவத்தை வைத்துக் கொண்டு கொள்ளை அடிப்பவர்கள் எம்.எல்.ஏக்கள் அல்ல.. மக்களை காப்பவர்கள் தான் உண்மையான எம்.எல்.ஏ. அப்படிபட்டவரைகளை நானே பார்த்து பார்த்து தேர்வு செய்து தவெக வேட்பாளர்களாக களம் இறக்குகிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமுனை போட்டி தான். என்றார். தொடர்ந்து இளைஞர்களுக்கான தவெக உத்தரவாதத்தை விஜய் வெளியிட்டார். அறிவிப்புகள் பின்வருமாறு..
* வேலைவாய்ப்பில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
* இளைஞர்கள் தொழில் தொடங்க பிணையம் இல்லா ரூ.25 லட்சம் கடன்
* தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை
* மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும்
* கால அட்டவணை வெளியிடப்பட்டு அரசுப்பணிக்கு ஆள் சேர்க்கப்படும்.
Read more: காலையில் தோன்றும் குமட்டல், வாயுத் தொல்லை.. அசால்ட்டா இருக்காதீங்க.. உயிருக்கே ஆபத்து!



