தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4, என தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது..
இதனிடையே 2 எம்.எல்.ஏக்களை கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு என்று தகவல் வெளியானது.. விஜய் ஆட்சியமைக்க தேவையான ஆதரவு கிடைத்ததால் அவர் நாளை காளை முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டது.. அதே போல் தவெக ஆட்சியமைக்க விசிகவும் இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை.. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை 4 மணிக்கு முடிவை அறிவிப்பதாக விசிக அறிவித்தது..
இந்த நிலையில் தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு வழங்கி உள்ளது.. தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்..
தவெகவுக்கான ஆதரவு கடிதத்தை விசிக தலைவர் தொல் திருமாவளவனிடம் இருந்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பெற்றுக்கொண்டார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தவெக ஆட்சி அமைப்பதற்கு விசிக தலைவர் திருமா ஆதரவு வழங்கி உள்ளார்.. அனைத்து தோழமைக் கட்சிகளுக்கும் நன்றி.. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், எனது ஆசான் திருமாவளவனுக்கு நன்றி.. மக்களின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார்.. வெற்றி.. வெற்றி.. வெற்றி..” என்று தெரிவித்தார்..
Read More : வெளியில் இருந்து ஆதரவு தரும் கட்சிகள்.. விஜய்யால் நிலையான அரசாங்கத்தை நடத்த முடியுமா..? என்ன நடக்கும்..?



