ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இதை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான தலைவர் 173 படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது..
நடிகர் ரஜினியின் 173வது படத்தின் டைட்டில் தர்மன் என்று இன்று அறிவிக்கப்பட்டது. ராஜ்கமல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. தர்மமே வெல்லும் என்ற கேப்ஷனையும் தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ளது..
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.. அப்போது “ நான் பேசினாலே பிராப்ளம், எனக்கும் பிராப்ளம், மற்றவர்களுக்கும் பிராப்ளம், நான் சும்மா இருந்தால் இவர் என்ன பேசவேமாட்டாரா? வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா என்று கிண்டல் செய்வார்கள்.. பேசினால்.. இதை முன்னாடியே பேச வேண்டியது தானே என்று சொல்வார்கள்..
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு உண்மையை புரிந்து கொண்டேன்.. நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது.. நம்மை பிடித்தவர்களுக்கு என்ன செய்தாலும் பிடிக்கும் என்று நினைப்பது முட்டாள் தனம்..
இந்த படத்திற்கு அஸ்வத் மாரிமுத்து 4-வது இயக்குனர்.. முதலில் கே.எஸ். ரவிக்குமாரை முடிவு செய்தோம்.. ஆனால் அது சரியாகவில்லை.. அதன்பின்னர் சுந்தர்.சி, அவருக்கு வேறு படங்கள் இருந்ததால் அது நின்றுவிட்டது.. அதன்பின்னர் சிபி. சக்ரவர்த்தி.. அந்த கதை அணு ஆயுதங்கள் பற்றி இருந்தது.. அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதால் அதுவும் நின்றுவிட்டது.. அதன்பின்னர் தான் தற்போது அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குகிறார்..
கமல் என்னிடம், ரஜினி, நான் கதை எல்லாம் எதுவும் கேட்கமாட்டேன், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.. அது தான் பெரிய டென்ஷன் ஆகி விட்டது.. ஆனால் நான் கமல்ஹாசனிடம், நீங்க கதை கேட்டு ஓ.கே சொன்ன பிறகு தான் படம் தொடங்குவோம் என்று கட்டாயப்படுத்தியதால் தான் கமல் தான் கேட்டார்.. இந்த படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. மிகவும் எனர்ஜிட்டான இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.. அவருடைய டிராகன் படம் எனக்கு பிடித்திருந்தது.. ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று நம்புகிறோம்.. ” என்று தெரிவித்தார்..



