நாளை முதல்வராக பதவியேற்கிறார் விஜய்..! 10 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..?

TVK vijay new 3

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2, விசிக 2. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 என தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.. எனவே விஜய் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை கிடைத்துவிட்டது..


இதையடுத்து இன்று மீண்டும் விஜய் ஆளுநரை சந்தித்தார்.. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தை ஆளுநர் அர்லேக்கரிடம் விஜய் நிரூபித்தார்.. அப்போது தவெகவுக்கு ஆதரவளித்த கட்சித் தலைவர்களும் உடனிருந்தனர்..

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை பிற்பகல் 3.15 மணியளவில் விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.. தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

விஜய் உடன் சேர்த்து நாளை 10 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் அமைச்சராகலாம் என்றும் கூறப்படுகிறது.. நிர்மல்குமார், அருண்ராஜ், வெங்கட் ரமணன் உள்ளிட்டோரும் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.. மேலும் தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி ஒதுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது..

RUPA

Next Post

Breaking : ஒருவழியாக ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர்..! 3 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்..!

Sat May 9 , 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2, விசிக 2. இந்திய யூனியன் முஸ்லீம் […]
vijay governor

You May Like