Breaking : ஒருவழியாக ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர்..! 3 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்..!

vijay governor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2, விசிக 2. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 என தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.. எனவே விஜய் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை கிடைத்துவிட்டது..


இதையடுத்து இன்று மீண்டும் விஜய் ஆளுநரை சந்தித்தார்.. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தை ஆளுநர் அர்லேக்கரிடம் விஜய் நிரூபித்தார்.. அப்போது தவெகவுக்கு ஆதரவளித்த கட்சித் தலைவர்களும் உடனிருந்தனர்.. 

இந்த நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய்யை நியமித்தார் ஆளுநர் அர்லேகர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் அழைப்பு விடுத்தார்.. முதலமைச்சராக நிரூபிக்கப்பட்ட 3 நாட்களில் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.. அதன்படி மே 13-ம் தேதிக்குள் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்..

விஜய் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை காலை 10 மணியளவில் விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.. தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Read More : நாளை முதல்வராக பதவியேற்கிறார் விஜய்..! 10 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..?

RUPA

Next Post

தமிழக அரசியலில் புதிய சகாப்தம்..! 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி..?

Sun May 10 , 2026
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாற்றம் உருவாகி இருக்கிறது.. கடந்த 60 ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் விஜய்யின் தவெக தலைமையில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1967ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. […]
vijay tvk 3

You May Like