தமிழகத்தில் உள்ள கோயில்களில் விஜபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஒரே வரிசையில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், கோயில்களில் அனைவரும் சமம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். பெரிய கோயில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம், கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிற கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இறைவன் முன் அனைவரும் சமம் என்றிருக்கும் நிலையில் விஐபி தரிசனம் இருப்பது பக்தர்களிடையே பாகுபாடு பார்ப்பது போன்று உள்ளது என்று மக்களிடையே பொதுவான கருத்து நிலவுகின்றது. கடவுளை தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வரிசையில் நின்று எந்த பேதமும் இன்றி கடவுளை வணங்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்த நிலையில் தற்போது இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
பிற மாநிலங்களில் ’விஐபி’ தரிசனத்திற்கு தனி டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு அதில் வருமானம் ஈட்டி வரும் நிலையில் தமிழகத்தில் சிறப்பு விஐபி கட்டணத்தை படிப்படியாக ரத்து செய்யப்படும் என வந்துள்ள அறிவிப்பு தமிழகத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கானாவில் பிரபலமான கேயில்களில் ஒன்று திருப்பதி தேவஸ்தனம். இதில், சிறப்பு தரிசனம் என பல வகையான தரிசனம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 35,000 பேர் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றார்கள். மேலும் கடந்த ஆண்டு ரூ.10,000 வழங்கினால் விஐபி தரிசனத்திற்கு சாதாரண பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறையை கடந்த 2019முதல் திருப்பதி தேவஸ்தனம் கடைபிடிக்கின்றதுஎன்பது குறிப்பிடத்தக்கது.