“வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்” -அரசியல் கட்சியை தொடங்கும் விஷால்!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக புதிய கட்சி தொடங்கப்படும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், “2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். ‘செல்லமே’ படம் வரும்போது சில திரையரங்குகள் இருந்தன. ‘பூஜை’ படம் வரும்போது, மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் வந்தன.

இன்று ஒரு திரையரங்குக்கு சென்றால், 6,7 படங்கள் இருக்கும். அதில் நீங்கள் எது வேண்டுமோ அதற்குச் செல்லலாம். மக்கள் ஓடிடியில் அனைத்து தரப்பு படங்களையும் பார்த்துவிட்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது. காப்பி அடித்தால் கூட கண்டுபிடித்து விடுவார்கள்.

அதேபோல தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலும் இருக்கும். அழகான அந்த பட்டியலில் மக்கள் தேர்வு செய்ய நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நிச்சயம் மிகப்பெரிய பட்டியலாக இருக்கும்” என்றார். கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தனியாகத்தான் வருவேன். முதலில் நான் யார் என்பதை காட்ட வேண்டும். பிறகு தான் கூட்டணி. அடுத்த கட்ட விஷயங்களை பின்பு பார்ப்போம்” என்றார்.

2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிட உள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர், கட்சியின் கொடி, பெயர், கோட்பாடுகளை அறிவிப்பேன் என்று கூறியதுடன், கைவசம் உள்ள படங்களை முடித்து தீவிர அரசியலில் இறங்குவேன் என நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Post

உங்கள் குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை குறைக்க வேண்டுமா?…இதோ உங்களுக்காக…!

Sun Apr 14 , 2024
குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதைக் குறைப்பதற்கான சில வழிகளை நாம் பார்க்கலாம். இன்றைய வாழ்க்கை முறையில் துரித உணவுகளும்,ஒழுங்கற்ற உணவு முறைகளாலும் நிறைந்துள்ளது.நம் குழந்தைகள் எண்ணெயில் பொரித்த உணவுகள்,பாக்கெட் பொருட்கள் போன்ற உணவுகளை விரும்புகின்றனர். இவற்றை தொடர்ச்சியாக சாப்பிடுவது உடலுக்கு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. முதலில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்துவதற்கு அவர்களிடம் அதன் பாதிப்புகளை எடுத்துரைக்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பு, பற்கள் பாதிப்பு, வயிறு உபாதைகள், […]

You May Like