மத்திய அரசின் மின் விநியோக நிறுவனம் பவர்கிரிட் கார்பரேஷன் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் மொத்தம் 1,149 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 49 இடங்கள் உள்ளன.
தமிழ்நாடு காலிப்பணியிட விவரம்:
டிப்ளமோ (சிவில்) – 2
டிப்ளமோ (எலெக்ட்ரிக்கல்) – 15
பட்டப்படிப்பு (எலெக்ட்ரிக்கல்) – 15
பட்டப்படிப்பு (சிவில்) – 2
ஐடிஐ (எலெக்ட்ரிஷியன்) – 15
வயது வரம்பு: இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
என்னென்ன தகுதி:
- ஐடிஐ தகுதிக்கு அதற்கான முழு நேர கல்வியை பெற்றிருக்க வேண்டும்.
- டிப்ளமோ தகுதிக்கு அந்தந்த பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக்கு சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கலில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- பட்டப்படிப்பு தகுதிக்கு எலெக்ட்ரிக்கல் மற்றும் சிவில் பொறியியலில் 4 வருட டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
தொழிற்பயிற்சி உதவித்தொகை:
- பட்டப்படிப்பு தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.17,500 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- டிப்ளமோ தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும்.
- ஐடிஐ தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.13,500 உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்களில் இருந்து கல்வித் தகுதி மற்றும் காலிப்பணியிடங்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். தகுதியானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Document Verification) அழைக்கப்படுவார்கள்.
சேர்வதற்கான நிபந்தனைகள்: சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், மருத்துவ சான்றிதழ் (Medical Fitness Certificate), காவல்துறை சான்றிதழ் (Police Verification Certificate) வழங்கிய பின் தொழிற்பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சி பெற ஆர்வமுள்ளவர்கள் முதலில் அரசு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஐடிஐ தகுதி பெற்ரவர்கள் https://apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்திலும், டிகிரி மற்றும் டிப்ளமோ தகுதி பெற்றவர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்.
அதனைத்தொடர்ந்து, https://www.powergrid.in/en/rolling-advertisement-for-enagagement-of-apprentices என்ற இணைப்பில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 6 வரை விண்ணப்பிக்கலாம்
Read more: ஒரு முறை சார்ஜ் செய்தால் 370 கி.மீ பயணிக்கலாம்.. புதிய அம்சத்துடன் டாடா நெக்ஸான் EV! விவரம் உள்ளே..