வாக்காளர்களே..!! செம குட் நியூஸ்..!! நாளை வாக்களிக்க இலவச பேருந்து..!! வெளியான அறிவிப்பு..!!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக நாளை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், இதில் வாக்களிக்க 6 கோடியே 21 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 60,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமையாற்ற வெளியூரில் பயணம் செய்யும் நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில், வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை நடைபெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்கச் செல்ல நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான செய்திக்குறிப்பில், ”கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் இலவச பேருந்து பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும் வாக்காளர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி, பயணச்சீட்டு இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் சாதாரண கட்டணம் நகரப் பேருந்துகளில் எவ்வித பயணச்சீட்டும் வழங்காமல் கட்டணமின்றி, காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்களிக்க அழைத்துச் செல்லலாம் என மண்டல துணை மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கு மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Read More : தமிழக அரசியலில் பரபரப்பு..!! நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா..? அதிர்ச்சி அறிக்கை..!!

Chella

Next Post

கோடைகாலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுறீங்களா..? இரட்டை குழந்தைகள் திடீர் மரணம்..!! தாய்க்கு தீவிர சிகிச்சை..!!

Thu Apr 18 , 2024
மாண்டியாவில் ஐஸ் கிரீம் சாப்பிட்ட ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோடைகாலம் வந்து விட்டாலே குளிர்தரும் பொருட்களின் விற்பனை இரட்டிப்பாக்கி விடும். இளநீர், தர்பூசணி, சர்பத் என இதம் தரும் பானங்கள் கோடை வெயிலை மறக்கச் செய்யும். இன்னும் சிலர் ஐஸ் கிரீமை விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்படி, ஐஸ் கிரீமை விரும்பிச் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தான், மாண்டியா மாவட்டத்தில் […]

You May Like