Breaking : “அதிமுகவை ஒன்றிணைக்க சபதம்.. தேர்தலில் ஒன்றாக பணியோற்றுவோம்..” ஓபிஎஸ் – டிடிவி – செங்கோட்டையன் கூட்டாக பேட்டி..

eps ops sasikala ttv

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்..


அந்த வகையில், தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவருக்கு மரியாதை செய்ய ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து பசும்பொன்னிற்கு 2 பேரும் ஒரே காரில் பயணித்தனர்.. பின்னர் இருவரும் திறந்த வேனில் இருவரும் பயணம் செய்தனர்.. தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பசும்பொன் அருகே டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையனை சந்தித்து பேசினர்..

இதை தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் இணைந்து கூட்டாக மரியாதை செலுத்தினர்.. மேலும் 3 பேரும் சேர்ந்து தேவர் சிலை தீபாராதணை காட்டினர்.. அதிமுக தலைமைக்கு எதிராக இருக்கும் இந்த மூவர் அணி பசும்பொன்னில் கூட்டாக மரியாதை செய்தது தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய ஓபிஎஸ் “ முத்துராமலிங்க தேவரின் புகழ் நாடு உள்ள வரை நிலைத்து இருக்கும்.. அதிமுகவில் பிரிந்திருக்கும் சக்திகள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இன்று தேவர் ஐயாவின் சன்னதியில் சபதம் மேற்கொண்டு. அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் நின்று மீண்டும் எம்.ஜி.ஆர், அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைத்திடுவோம் என்று உறுதிப்பூண்டுள்ளோம்..

அதற்காக தான் டிடிவி, செங்கோட்டையனும், நானும் ஒன்றாக வந்துள்ளோம்.. திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வகையில் எங்களின் ஒருங்கிணைப்பு இருக்கும்.. அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் மூவரும் இணைந்துள்ளோம்..” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன் “ இன்று செங்கோட்டையன் அவர்கள் இங்கு வந்து மரியாதை செலுத்தி இருக்கிறார்.. இன்று அம்மாவின் தொண்டர்களை பாதுகாக்க வேண்டும் என்று ஒரே நோக்கில் நாங்கள் இணைந்துள்ளோம்.. எங்களுடன் செங்கோட்டையன் கொங்கு மண்டலத்தில் இருந்து இணைந்துள்ளார்.. அவர் எங்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி.. துரோகத்தை வீழ்த்தி அம்மாவின் ஆட்சியை அமைக்க நாங்கள் 3 பேரும் தேர்தலில் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்.. எங்களின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை வரும் நாட்களில் தெரிந்துகொள்வீர்கள்.. எடப்பாடி பழனிசாமி என்ற துரோக மனிதர் தான் எங்களுக்கு எதிரி” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன் “ திமுக ஆட்சியை வீழ்த்துதற்காக நாங்கள் மீண்டும் இணைந்துள்ளோம்…” என்று தெரிவித்தார்..

Read More : Breaking : தேவர் சிலைக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி கூட்டாக மரியாதை.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் இபிஎஸ்.. அடுத்தது என்ன?

RUPA

Next Post

பூசாரியை கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்.. கடும் வாக்குவாதம்.. தர்ணா.. தேவர் நினைவிடத்தில் என்ன நடந்தது? வீடியோ..!

Thu Oct 30 , 2025
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், ஜி.கே, மணி, சசிகலா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மூவேந்தர் முன்னேற்ற […]
sridhar vandaiyar

You May Like