ஆடு கோழி வளர்க்கணுமா..? 50% மானியம் தரும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

goat money

தொழில்முனைவோர் வளர்ச்சியடையவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் “தேசிய கால்நடை இயக்கம்”.. இத்திட்டதின் சிறப்பம்சங்கள் என்னென்ன.. எப்படி இணைவது உள்ளிட்ட பிற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.


இந்த திட்டத்தின் கீழ், 1,000 நாட்டு கோழிகள் உடைய பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வாயிலாக கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து, நான்கு வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக, 25 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.

ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்ப்பதற்கு 100, 200, 300, 400, 500 ஆடுகள் என 5 அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை 2 தவணைகளில் வழங்கப்படும். பன்றி பண்ணை அமைக்க 50 பெண் பன்றிகள் அல்லது 100 பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க 50 பெண் பன்றிகள் அல்லது 100 பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

யாருக்கு கிடைக்கும்? முனைவோர் சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும். தொழில்முனைவோர், தகுதியான நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மூலம் வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதம் பெற வேண்டும், திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

பயன்பெற விரும்புவோர் https://nlm.udyamimitra.in/: என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை இத்திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்தும் நிறுவனமான தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு திட்ட வழிகாட்டுதலின்படி உள்ளவற்றை கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும்.

தேவையான ஆவணங்கள்: திட்ட அறிக்கை படிவம், நிலத்தின் ஆவணம், நிலத்தின் போட்டோ, பயனாளிகளின் ஆதார் கார்டு, பான் கார்டு, ஜிஎஸ்டி பதிவு சான்று, உள்ளாட்சி தடையில்லா சான்று, மின் கட்டண பில், குடிநீர் பில், போன் பில், வங்கி கணக்கு புத்தகம், ஒப்பந்த பத்திரம் இவைகளில் ஏதாவது ஒன்று கட்டாயம் இணைக்க வேண்டும். 3 வருடங்களின் வங்கி கணக்கு பரிமாற்று சான்றிதழ், ஜாதி சான்று, கல்வி சான்றிதழ், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், மற்றும் முன்னனுபவ சான்றிதழ் போன்றவற்றுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Read more: “லேட் பண்ணாதீங்க.. ரொம்ப சிக்கல்”..!! “கூட்டணியை உடனே அறிவியுங்கள்”..!! தேமுதிகவுக்கு கெடு விதித்த பாஜக..?

Next Post

TNEA Counselling: 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்.. தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது..?

Sat Jun 7 , 2025
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பொறியியல் கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நேற்று (ஜூன் 6) நள்ளிரவில் முடிவடைந்தது. மொத்தம் 3,02,374 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனர் என பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 44 […]
Counselling 1

You May Like