“நாங்களே சொல்றோம்.. இது சிறுபான்மை அரசு தான்.. ஆனால்..” நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் CM விஜய் பேச்சு..!

vijay 1 1

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்க வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 பேரும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22 பேரும், நடுநிலை வகிப்பதாக 5 பேரும் தெரிவித்தனர்.. இதனால் முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்..


தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் விஜய் ” முதலில் நம்பிக்கை தீர்மானத்தை, மக்களுக்கான இந்த ஆட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த அணியும் இல்லாத தனிச்சிறப்பு மிக்க அணியாக களம் கண்டோம்.. 1967, 1977 தேர்தல்கள் வாயிலாக அமைந்த சாமானியர்களின் அரசை போலவே 2026 தேர்தலில் தவெக சாமானியர்களின் அரசை அமைக்கும் என்று தீர்மானமாக கூறினோம்..

மக்களும் வாக்களித்தனர்.. ஒரு விரல் புரட்சி விசில் புரட்சியானது.. தவெகவை தனிப்பெரும் கட்சியாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.. கட்சி ஆரம்பித்த 3 ஆண்டுகளிலேயே வெற்றி பெற்றாலும், பெரும்பான்மை தள்ளிப் போயிருக்கிறது.. அதனால் இந்த சிறுபான்மை அரசு என்று அழைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே.. இது சிறுபான்மை அரசு தான் நாங்களே சொல்கிறோம்.. ஆனால் இது சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அரசு.. பெண்கள், முதியோர், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்புக்குமான அரசு தான் இந்த அரசு..

இந்த மக்கள் அரசு, மனசாட்சி உள்ள மக்களாட்சியாக இந்த அரசு செயல்படும்.. எங்களுக்கு ஆதராவக வாக்களித்தவர்கள் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. இது எல்லோருக்குமான அரசு.. இது சாதி மத எல்லைகளை கடந்த அரசு.. பாகுபாடு காட்டாத அரசு, அரசியல் காரணங்களுக்காக யாரையும் புண்படுத்தாத அரசு.. அதிகாரத்திற்காக அமைந்த அரசு அல்ல.. அனைவரையும் அரவணைக்கும் அரசு.. எவர் மீது வெறுப்பு காட்டும் அரசு அல்ல.. எல்லோரையும் விரும்பும் அரசு.. மக்களாட்சியை ஆதரித்த அனைவருக்கும் மீண்டும் என் நன்றி..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

விஜய்யின் ஜோதிடர் ரத்தன் பண்டிட்-க்கு அரசுப் பதவி வழங்கிய உத்தரவை வாபஸ் பெற்றது தமிழக அரசு..!

Wed May 13 , 2026
முதல்வர் விஜயின் சிறப்பு பணி அதிகாரியாக ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ரதன் பண்டிட் தற்போது சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். முதல்வரின் அரசியல் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டதாகவும் இந்த ஆணை இன்று முதல் அமலுக்கு வருகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. எனினும் ஆஸ்தான ஜோதிடரை எப்படி அரசுப் பதவியில் நியமிக்கலாம் என்று […]
randhan pandit tvk vijay 040553421

You May Like