‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர்,” இன்று காலை காவல்துறையினர் கட்சி கொடிகளை எல்லாம் அகற்ற சொல்லி இடையூறுகளை ஏற்படுத்தியதாக கட்சியினர் கூறினார்கள்.
நான் போகும் இடமெல்லாம் தேமுதிகவிற்கு மக்களும் காவல்துறையினரும் பக்கபலமாக உள்ளார்கள். ஆனால் கோவையில் மட்டும் ஏன் இப்படி உள்ளது. கோவை மாவட்டத்திற்கு யார் பொறுப்பாளர் என்று கேள்வி எழுப்பினார். அப்பொழுது தொண்டர்கள் செந்தில் பாலாஜி என கோஷமிட்டனர்.
தேமுதிகவைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்று என்னும் கூட்டம் அவர்கள் என்றும் யார் இடையூறு செய்தார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. உங்கள் வேலையை தேமுதிகவிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் போன்று லஞ்சம் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றவர்கள் நாங்கள் அல்ல என்று கடுமையாக சாடினார்.
மேலும், தேமுதிக அங்கம் வகிக்காமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாது. அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள். காவல்துறையில் உள்ளவர்கள் கேப்டனின் உருவங்கள் தான். கேப்டனை பார்த்து தான் காவல்துறையிலும் ராணுவத்திலும் பலரும் இணைந்தார்கள். இதனை ராணுவத்தில் இருப்பவர்களே என்னிடம் கூறியுள்ளார்கள் என்றார்.
Read more: எடை குறையும்.. இதய நோய் வராமல் தடுக்கும்.. தினமும் 30 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் இத்தனை நன்மைகளா..?



