தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை முதல்வர் கடுமையாக விமர்சித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ திமுகவில் அங்கம் வகிக்கும் கூட்டணி எல்லாம் சட்டமன்றத்தில் வாய்மூடி அமைதியாக இருந்ததால் செல்வாக்கு குறைந்தது.. மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக அடையாளம் காணப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் செல்வாக்கை இழந்தது.. கூட்டணி கட்சிகளுக்கு விசுவாசம் இல்லாதவர் மு.க ஸ்டாலின்.. ஆனால் கூட்டணி கட்சிகளை உயிரை கொடுத்து காப்பாற்றும் கட்சி அதிமுக..
அன்று முதல் இன்று வரை ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கட்சி அதிமுக.. அதனால் தான் நிலைத்து நிற்கிறோம்.. 2021 தேர்தலில் திமுக தலைமையில் எந்தெந்த கூட்டணி அங்கம் வகித்ததோ அதே கூட்டணி தான் இப்பவு தொடர்கிறது.. ஒரே ஒரு கட்சி தான் புதிதாக சேர்ந்துள்ளது.. நாம் கஷ்டப்பட்டு உழைத்து தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தோம்.. ஐசியூவில் இருந்த தேமுதிகவை வெண்டிலேட்டர் போல் காப்பாற்றியது அதிமுக. அவர்கள் உதவியை மறந்து நம்மை விமர்சிக்கின்றனர்..
அதிமுக என்பது ஏணியில் ஏற்றிவிடும் கட்சி.. ஆனால் உச்சிக்கு சென்றதும் ஏணியை பறிக்கும் கட்சி தான் திமுக.. திமுகவிற்கு முட்டுக்கொடுத்து செல்வாக்கு குறைந்ததால் கம்யூனிஸ்ட் கட்சிக்கான சீட்டை திமுக குறைத்துவிட்டது..
அப்படிப்பட்ட கட்சியில் தான் பிரேமலதா கூட்டணியில் சேர்ந்திருக்கிறார்.. நம்ம கூட்டணியில் நம்பி வந்தவர்களுக்கு சின்னம் பெற்று தந்த கட்சி அதிமுக.. கூட்டணி கட்சி வேட்பாளர்களை பாடுபட்டு வெற்றி பெற கூடிய கட்சி அதிமுக.. அதிமுக தலைமை என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்தக் கூடியவர்கள் அதிமுக தொண்டர்கள்.
நான் முதல்வராக பொறுப்பேற்ற போது சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் கீழ்த்தரமாக நடந்து கொண்டனர்.. சட்டையை கிழித்துக் கொண்டு நாடகம் ஆடினார் மு.க ஸ்டாலின்.. அதிக பெரும்பான்மை உடன் அதிமுக வென்றால் ஸ்டாலின் நிலை என்னவாகும்..?
திமுகவில் குடும்பத்தினர் மட்டுமே பிரச்சாரம் செய்கின்றனர்.. ஒருபக்கம் முதல்வர் பேசுகிறார்.. இன்னொரு பக்கம் உதயநிதி பேசுகிறார்.. மற்றொரு பக்கம் கனிமொழி பேசுகிறார்.. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.. திமுகவுக்கு இது தான் கடைசி தேர்தல்.. அதிமுக கூட்டணியை ஜெயிக்க வைக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர்.. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்..” என்று தெரிவித்தார்..
Read More : “ மம்தா சமநிலையை இழந்து பேசுகிறார்..” திமுக, காங்கிரஸ் குறித்த கருத்துக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்..!



