“ DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்.. “ தனிநபர் வருமானம் உயர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு..

MK Stalin dmk 6

தமிழ்நாட்டில் தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் உயர்வு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் தனிநபர் வருமானம் 1.96 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.. இதுகுறித்து நிதியமைச்சர் தனது சமூக வலைதள பதிவில் “ மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப் படைத்து நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது, தமிழ்நாடு. அந்தச் சாதனை பட்டியலில் மற்றுமொன்றாக, தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் மாநிலங்களுக்கிடையே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தச் சாதனையானது, திராவிட மாடலின் தொலைநோக்கு திட்டங்கள், தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது. “எல்லார்க்கும் எல்லாம்” என்ற உன்னத கொள்கையோடு செயல்பட்டு வரும் நமது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அடுத்த மணிமகுடம் தான் இது.


கடந்த ஆட்சியின் இறுதியாண்டான 2020-21-ல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 1.43 இலட்சம் ரூபாய் மட்டுமே. நம் கழக ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக 8.15 சதவீதம் வளர்ச்சியோடு 2024-25 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் 1.96 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆட்சிக் காலத்தில், 2016-17 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை 4.42 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. இத்தகைய உயரிய சராசரி வளர்ச்சியானது, வெற்றிகரமான திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு சான்றாகும்.

தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் தேசிய சராசரி தனிநபர் வருமானம் 1.14 இலட்சம் மட்டுமே. 2014-15 முதல் 2024-25 வரையிலான கடந்த பத்தாண்டு தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 57 சதவீதம் மட்டுமே. ஆனால், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி விகிதமோ 83.3 சதவீதம் ஆகும். மக்கள் நலனை மையப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தில் மட்டும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு கவனம் செலுத்தியதால் இவை சாத்தியமானது. இதே உற்சாகத்தோடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி அண்ணன் தளபதி அவர்களின் தலைமையில் இன்னும் வேகமாகப் பயணிப்போம்!” என்று பதிவிட்டிருந்தார்..

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் உயர்வு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ தேசிய சராசரியை விஞ்சினோம்! கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்! அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : 100 நாள் வேலை திட்டம்… 2024-25 இல் 74.34 லட்சம் பேருக்கு வேலை…! மத்திய அரசு கொடுத்த தகவல்…!

RUPA

Next Post

“இது நம்ம டைம்.. செம அடி அடிக்கப்போறேன்.. “ மிரட்டலான கருப்பு பட டீசர் வெளியானது.. சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்..

Wed Jul 23 , 2025
ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.. ஆர்.ஜே பாலாஜி இயக்கும் இந்த படம் சூர்யாவின் 45வது படமாகும்.. இந்த படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார்.. மேலும் நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்டோ இந்த படத்தில் நடித்துள்ளனர்.. சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான இவர், கருப்பு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.. […]
new project 2025 07 23t100102.312 1753246111122 1280x720xt 1

You May Like