இன்றைய தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில், உள் தமிழக மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதே போன்று வரும் 20ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அனேக பகுதிகளில் தமிழக மாவட்டங்களிலும், ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை போன்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை இதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
அதேபோல வரும் 21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ததற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல நடுநடுவே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று சூறாவளி காற்று 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் நாளை காலை வரையில் வீசலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அந்தமான் கடல் பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், நடுநடுவே 55 கிலோமீட்டர் வேகத்திலும், நாளை மறுநாள் காலை வரையில் வீசலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி இருக்கக்கூடிய மேற்கு வங்க கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் நாளை மறுநாள் முதல் வரும் 21ஆம் தேதி வரையில் சூறாவளி காற்று 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நடுநடுவே 55 கிலோமீட்டர் வேகத்திலும் 22 ஆம் தேதி காலை வரையில் வீசலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிட்ட தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.