தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு……!

தமிழகத்தின் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. ஆகவே காற்றில் ஈரப்பதம் அதிகரித்து இருப்பதால் எதிர்வரும் நாட்களில் தமிழக மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று கூறியிருந்தார்.

இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 6ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படும் எனவும் அதனைத் தொடர்ந்து, மே மாதம் 7 அல்லது 8ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

இத்தகைய நிலையில் தான் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Next Post

குற்றாலத்தில் நீங்கியது தடை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி….,!

Wed May 3 , 2023
சென்ற சில மாதங்களாக குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆகவே அறிவியில் நீர் வற்றி போய் பாறைகள் மட்டுமே காணப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் கவலை அடைந்தனர். இத்தகைய சூழ்நிலையில் தற்சமயம் தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆகவே குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்டவற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக, குற்றாலத்தில் குளிப்பதற்கு பொதுமக்களின் வருகையும் அதிகரித்திருக்கிறது. […]

You May Like