உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற இளைஞர் பலி : அதிரடி முடிவெடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியம்..

சென்னையில் உடல் பருமன் சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை டிவி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை மகன்கள். இவர்களுக்கு 26 வயது ஆகிறது. இவர்களுள் மூத்த மகனான ஹேமசந்திரன்  உடல் பருமன் அதிகமாக இருந்ததால் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை  செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு ஹேமசந்திரனுக்கு மயக்க மருந்தும் கொடுக்கப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. உடல்பருமன் சிகிச்சையின்போது, இளைஞர் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகனின் இறப்பு குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்த, உடனே பம்மல் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் கொடுத்தார்கள். இதுகுறித்து உயிரிழந்தவின் பெற்றோர் கூறியதாவது, “ கடந்த ஆறு மாதமாக தனியார் மருத்துவமனையில் மருத்துவர் பொற்கோ என்பவர் தொடர்ந்து தொலைபேசி மூலம் கவுன்சிலிங் செய்து சிகிச்சைக்கு வருமாறு அழைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், ஆலோசனை நடத்திய தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் தனக்கென்று தனியாக எந்த வசதியுமில்லாத மருத்துவமனையில் வைத்து  சிகிச்சை அளித்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

அங்கு அறுவை சிகிச்சை துவங்கிய 15 நிமிடங்களில் பதற்றத்துடன் வந்த மருத்துவர் பொற்கோ, இங்கு சிகிச்சை அளிக்க முடியாத என கூறி, உயர்ரக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்திலையே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்றார்.

இந்நிலையில், நேற்று இரவு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் பலியான ஹேமசந்திரனின் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புக்கொண்டு பேசியிருந்தார். இந்த இறப்பு குறித்து முக்கிய முடிவை எடுத்திருக்கிறார் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம். உடல் எடையை குறைக்கும் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என பலியான இளைஞரின் குடும்பத்திற்கு உறுதியளித்திருந்தார்.

Next Post

Breaking | மாணவர்கள் செம ஹேப்பி.!! பள்ளிகள் திறப்பு தேதி குறித்து அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

Thu Apr 25 , 2024
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் ஜூன் 2-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாா்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை பொதுத்தோ்வு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்தத் […]

You May Like