டெல்லி–மீரட் RRTS ரயிலில் ஒரு ஜோடி அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ நவம்பர் 24 அன்று பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஓடிக் கொண்டிருந்த ரயிலுக்குள் அநாகரகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது..
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த ஜோடி முதலில் முத்தமிடுவதும் பின்னர் ஒரு சீட்டால் தங்களை மூடிக்கொள்வது உடலுறவில் ஈடுபட்டதையும் பார்க்க முடிகிறது.. இது மோடிநகர் – மீரட் நிலையங்களுக்கு இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ஜோடி இந்த செயலை செய்யும் போது அதே கோச்சில் மற்ற பயணிகளும் இருந்துள்ளனர்.
சில வரிசைகள் பின்னால் ஒரு பெண் பயணி அமர்ந்திருப்பது காட்சியில் தெரிகிறது; அவள் நடந்துகொண்டிருப்பதை கவனிக்காதது போல உள்ளது. பின்னணியில் ரயில் அறிவிப்புகள் கேட்கப்படுகின்றன. சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த இருவரும் தனித்தனி இடங்களில் அமர்ந்து சாதாரணமாக பேசிக்கொண்டிருப்பதும் காணப்படுகிறது.
அதிகாரிகள் விசாரணை
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச காவல்துறை மற்றும் தேசிய போக்குவரத்துக் கழகம் இணைந்து விசாரணையை தொடங்கியுள்ளன.
வீடியோவில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்தும் அவர்கள் அடையாளம் காணப்பட முடியுமா, மேலும் ரயிலுக்குள் உள்ள கண்காணிப்பு காட்சிகள் (CCTV) இவ்வாறு வெளியிடப்பட்டதில் தனியுரிமை மீறப்பட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினை
இந்த சம்பவம் எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் கடுமையான விவாதத்தை உருவாக்கியுள்ளது. சில பயனர்கள் இதை பொது இடத்தில் வெட்கமில்லாத அநாகரிக செயல் என கடுமையாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக, அந்த பெண் பள்ளி சீருடையில் இருப்பதாக கூறப்படும் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பயனர், “நேற்று இரவு நான்கு பகுதிகளாக இந்த வீடியோ வந்தது. பார்த்து அதிர்ந்தேன். பள்ளி உடையில் இருக்கும் பெண், பின்னால் ஒரு பெண் பயணி இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பயனர் “ “இருவருக்கும் தலா ரூ.20,000 அபராதம் விதியுங்கள். வாழ்நாள் எல்லாம் பயப்படும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சிலர், நடந்தது தவறாக இருந்தாலும், வீடியோ எடுத்து வைரலாக்கியது இன்னும் பெரிய தவறு எனக் கூறுகின்றனர். “இதைக் காட்சிப்படுத்தி பரப்பியவர்கள் தவறு. ஒருவரின் தனியுரிமையில் தலையிடக்கூடாது” என்ற கருத்தும் பதிவாகியுள்ளது. மொத்தத்தில், இந்த சம்பவம் பொது ஒழுக்கம் vs தனியுரிமை என்ற இரு கோணங்களில் தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளது.



