ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் போது சில நேரங்களில், கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் பணம் வராமல் போகும் சூழல் ஏற்படலாம். இப்படிப்பட்ட சமயங்களில் பதட்டப்பட வேண்டியதில்லை. பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
உடனடியாக செய்ய வேண்டியவை:
* ஏடிஎம் ரசீதை பாதுகாத்து வைுங்கள். அதில் உள்ள Transaction ID, ATM எண், தேதி, நேரம் போன்ற விவரங்கள் முக்கியம்.
* உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள். இது உங்கள் வங்கி ATM ஆனாலும், வேறு வங்கி ATM ஆனாலும், Account வைத்திருக்கும் வங்கியையே தொடர்பு கொள்ள வேண்டும்.
* வாடிக்கையாளர் சேவை (Customer Care) எண் மூலம் அழைக்கலாம் அல்லது நேரடியாக கிளையில் புகார் அளிக்கலாம்.
* ஆன்லைன்/மொபைல் பேங்கிங் வழி புகார் செய்யுங்கள். பெரும்பாலான வங்கிகளில் “Complaint” என்ற விருப்பம் இருக்கும்.
* பொதுவாக, 24–48 மணி நேரத்திற்குள் பணம் தானாகவே உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். RBI விதிமுறைகளின்படி, அதிகபட்சம் 5 வேலை நாட்களுக்குள் பணத்தை வங்கி திருப்பித் தர வேண்டும்.
* 5 வேலை நாட்களுக்குள் பணம் வரவு செய்யப்படாவிட்டால், தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ₹100 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த இழப்பீடு, தானாகவே உங்கள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.
* உங்கள் புகாரை வங்கி தீர்க்கவில்லை அல்லது திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என்றால், RBI-க்கு உட்பட்ட வங்கி குறைதீர்ப்பாளர் (Banking Ombudsman) அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.
* எனவே, ஏடிஎம் மூலம் பணம் வராமல், கணக்கில் கழிக்கப்பட்டால் பதட்டப்படாமல் மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றுங்கள். இழந்த பணத்தை உறுதியாகத் திரும்பப் பெறலாம்.
Read more: அள்ளி அள்ளி கொடுக்கப் போகும் சனி பகவான்.. இந்த 3 ராசிகளுக்கு பெரும் ஜாக்பாட்!