திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
மதுரை உத்தங்குடியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 48 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் நடைபெறும் முக்கிய பொதுக்குழு என்பதால், மாநிலம் முழுவதிலுள்ள அனைத்து அணி நிர்வாகிகளும் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், திமுக அமைப்பில் கல்வியாளர்கள் (ஆசிரியர்கள், பேராசிரியர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளர்கள் ஆகியோருக்கென இணை அணிகள் (wing) உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, திமுகவின் சமூகப் பரப்பை விரிவாக்கும் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்களில், திமுகவிற்குள் இரண்டு புதிய அணிகளை உருவாக்குவதும் அடங்கும். இதன்படி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களைக் கொண்ட ஒரு கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நலனில் கவனம் செலுத்தும் ஒரு அணியும் உருவாக்கப்படுகிறது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* திமுக முன்னாள் தலைவரான கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்.
* தொடர் வெற்றி நாயகராகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டுக்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும் என்றும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தொடரும் அநீதிகளுக்கு கண்டனம்.
* மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்.
* சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்த வேண்டும்.
* தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது.
* ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான ஸ்டாலினுக்கு பாராட்டு.
* உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விமர்சித்த குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கண்டனம்.
* அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பாஜக அரசுக்குக் கண்டனம்.
* உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும்.
* பேரிடர் மீட்புப் பணியில் திமுக அரசுடன் கட்சியினர் துணை நிற்க வேண்டும்.
* எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்.
* அதிமுக ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பை வரவேற்கிறோம்.
* 2026-இல் திமுக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்.
* இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை திமுக அரசு மேம்படுத்துகிறது.
* உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திமுக அரசின் சாதனைகளைப் பரப்புவோம்
* தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் திமுக அரசுக்குப் பாராட்டுகள்.
* ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திமுக அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்.
* துணை முதலமைச்சர் உதயநிதி தொடர்ந்து பணிகளை தொடரத் துணை நிற்போம்.
* தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்.
* தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக.
* கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பாஜக அரசுக்குக் கண்டனம்.
* இரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு கண்டனம்.
* சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இஸ்லாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக.
* ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்குக் கண்டனம்.
Read more: 130 ஆபாச வீடியோக்கள்.. இளம் பெண்களுடன் கட்டி புரண்ட பாஜக மூத்த தலைவரின் மகன்..!! வலுக்கும் கண்டனம்