’என்ன செய்றது எல்லாம் பழக்கதோஷம்’..!! இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட ஓபிஎஸ்..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ பெரியோர்களே தாய்மார்களே உங்களது பொன்னான வாக்குகளை வெற்றிச்சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் செலுத்துமாறு” என்று தெரிவித்து உடனடியாக சுதாரித்துக் கொண்டு பலாப்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “என்ன செய்வது பழக்கதோஷம்” என்றும் கூறினார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில், ஒ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது இரட்டை இலை சின்னத்துக்கு ஓபிஎஸ் ஓட்டுக் கேட்டதை அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.யான நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்திரபிரபா போட்டியிடுகிறார்.

Read More : Job | ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!! இந்த தகுதி இருந்தாலே போதும்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Chella

Next Post

முடிவுக்கு வரும் மன்மோகன் சிங்கின் அரசியல் சகாப்தம்..!! இன்றுடன் ஓய்வு..!!

Wed Apr 3 , 2024
மக்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 54 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு பெறுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 13-வது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். இதன்மூலம் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்குப் பின் அதிக நாட்கள் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் தான் இந்தியாவின் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த முதல் பிரதமராவார். ஆக்ஸ்போர்ட் […]

You May Like